குடியிருப்புப் பகுதிகளில் உலா வரும் படையப்பா யானை; பொதுமக்கள் அச்சம்!

கேரள மாநிலம் மூணாறில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் படையப்பா யானை உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கேரள மாநிலம் மூணாறின் நகர் மற்றும் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளில் உணவு தேடி அடிக்கடி…

கேரள மாநிலம் மூணாறில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் படையப்பா யானை உலா
வருவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் மூணாறின் நகர் மற்றும் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளில்
உணவு தேடி அடிக்கடி படையப்பா யானை உலா வருவது வழக்கமாகும். சில தினங்களாக மறையூர் லக்கம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய அந்த யானை, நள்ளிரவில் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. அங்கு கால்நடைகளுக்கு உணவுக்காக சேமித்து வைத்திருந்த தீவனங்களை தின்று தீர்த்தது.

மேலும் அந்த பகுதியில் உள்ள தெருக்களில் உலா வந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள வீட்டை தாக்கிய நிலையில் தற்போது கடந்த 28ஆம் தேதி படையப்பா யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

இந்நிலையில், படையப்பா யானையால் மனித உயிர்களுக்கு ஆபத்து இல்லை என்றாலும் தொடர்ச்சியாகவே மக்கள் வசிக்கும் இடங்களில் உலா வருவது குடியிருப்புகளை சேதப்படுத்தி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறையினர் படையப்பா யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.