லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா நடிக்கும் விக்ரம் படத்திற்கான ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்வு இன்னும் ஒளிபரப்பாக நிலையில், விழாவில் பிரபலங்கள் பேச்சுக்கள் தான் நேற்றிலிருந்து வைரலாகி வருகிறது.
இந்த விழாவில் படத்தில் நடித்த நட்சத்திர பட்டாளங்களை தாண்டி சிம்பு, பா.ரஞ்சித் உள்ளிட்ட சினிமா ஆளுமைகளும் பங்கேற்றிருந்தனர். சிம்பு ஆரவாரத்துடன் மேடையேறும் காட்சிகளும், ‘பத்தல பத்தல’ பாடுலுக்கு நடன இயக்குநர் சாண்டியுடன் ஆடும் காட்சிகளும் வெளியாகி பலரையும் ரசிக்க வைத்தது. ஒரு காலத்தில் தன்னுடைய படங்களின் ஹூட்டிங்கிற்கே போவதில்லை என்று விம்ர்சிக்கப்பட்ட சிம்பு இன்று இன்னொரு படத்தின் விழாவுக்கு சென்று மேடை ஏறி மாஸ் செய்ததெல்லாம் ரகளையான மாற்றங்கள்!
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் விழா மேடையில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், கமல் ஹாசனை வைத்து தான் ஒரு படம் இயக்க உள்ளதாகவும், அவரின் விருமாண்டி படம் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் அதே கதாப்பாத்திர பாணியில் தென் தமிழகத்தை மையப்படுத்தியதாக அப்படம் இருக்கும் என்றும் தெரிவித்தார். அப்படியென்றால், ‘ வேட்டியை மடித்துக்கட்டியவாரு கமலை காட்டப்போகிறீர்களா’ என்று ஆங்கர் கேட்டதற்கு, ‘ஏன் மதுரையில் யாரும் கோட்-சூட் போடக்கூடாதா?’ என கிண்டலாக பதிலளித்துள்ளார் பா.ரஞ்சித். இதனைத்தொடர்ந்து சிம்புவை தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும், அவரை வைத்தும் ஒரு படம் இயக்க ஆசை என்றும் பா.ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
இதை கேள்விப்பட்ட சிம்பு ரசிகர்கள் அனைவரும் மிகவும் குஷியாகிவிட்டனர். மெட்ராஸ், சார்பட்டா மாதிரி ஒரு தரமான கதையில் சிம்பு இறக்கப்பட்டால் அதுவே தங்களுக்கு தீபாவளி எனவும் அவர்கள் கூறிவருகின்றனர். இதனைத்தொடர்ந்து, ‘வெந்து தணிந்தது காடு.. STR-க்கு வணக்கத்த போடு! வெந்து தணிந்தது காடு..பா.ரஞ்சித்துக்கு வணக்கத்த போடு! என ‘கூல் சுரேஷ்’ ஸ்டைலில் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.