ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் முடிவில்லாமல் தொடரும் நிலையில், மெக்டொனால்டு நிறுவனம் ரஷியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
மெக்டொனால்டு நிறுவனம் ரஷ்யாவில் 850 உணவகங்களைக் கொண்டுள்ளது, இதில் 62,000 பேர் பணியாற்றுகின்றனர். உக்ரைன் ஆக்கிரமிப்புக்குப் பிறகு ரஷ்யாவில் இருந்து வெளியேறும் மற்றொரு பெரிய மேற்கத்திய நிறுவனம் மெக்டொனால்டு.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து வரும் நிலையில், தனது ரஷ்ய வணிகத்தை விற்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக மெக்டொனால்டு நிறுவனம் திங்கள்கிழமை கூறியுள்ளது.
போரினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சுட்டிக் காட்டிய மெக்டொனால்ட் நிறுவனம், ரஷ்யாவில் வணிகம் செய்வது இனி மெக்டொனால்டின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்று கூறியுள்ளது.
மார்ச் மாத தொடக்கத்தில் ரஷ்யாவில் அதன் கடைகளைத் தற்காலிகமாக மூடுவதாகக் மெக்டொனால்டு கூறியது. ஆனால், ஊழியர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும் என தெவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து, மெக்டொனால்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கிறிஸ் கெம்ப்ஜின்ஸ்கி கூறுகையில், மெக்டொனால்டு நிறுவனத்தில் 62,000 பேர் பணியாற்றுகின்றனர். ரஷ்யாவைச் சேர்ந்தவர் இந்த நிறுவனத்தை வாங்கும்போது, இந்த தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். மெக்டொனால்டு நிறுவனத்தில் உள்ள அதிக அளவிலான ஊழியர்கள் நூற்றுக்கணக்கான ரஷ்ய சப்ளையர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நிலையில் இந்த முடிவு கடினமானது.
இருப்பினும் ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதல் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை கருத்தில் கொண்டு, உலகளாவிய சமூகத்தின் மீது எங்களுக்கு உள்ள பொறுப்பு காரணமாக, மேலும் நாங்கள் எங்கள் மதிப்பை இழக்காமல் இருக்க இதனை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது எனத் தெரிவித்துள்ளார்.