இயக்குந்ர் பா.ரஞ்சித் கூறியது தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வேண்டுமானால் பொருந்துமே தவிர, நடிகர் நடிகைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என நடிகை இனியா தெரிவித்துள்ளார்.
நீலம் புரொடக்சன் சார்பில் இயக்குநர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’ரைட்டர்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார். சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படம் நாளை (டிசம்பர் 24ம் தேதி) திரையரங்குக்கு வர உள்ள நிலையில், படக்குழுவினர் செய்தியாளர் களை சந்தித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், தமது படங்களில் பணிபுரியும் கலைஞர்களுக்கு பின்னாளில் வாய்ப்புகள் கிடைப்பது இல்லை என்று பேசியிருந்தார். இந்நிலையில், நியூஸ் 7 தமிழின் சினிமேக்ஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை இனியா, தனது சினிமா பயணம் பற்றியும் ரைட்டர் படத்தில் தான் நடித்துள்ள முக்கிய கதாப்பாத்திரம் பற்றியும் பேசியிருந்தார். அப்பொழுது, இயக்குனர் ரஞ்சித் கூறியது தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வேண்டுமானால் பொருந்துமே தவிர, நடிகர் நடிகைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறினார்.