முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல்

தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் தனது வேட்புமனுவை தக்கல் செய்தார் ப.சிதம்பரம். தமிழ்நாடு, கர்நாடகா உள்பட 15 மாநிலங்களிலிருந்து 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, அந்த இடங்களுக்கு…

தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் தனது வேட்புமனுவை தக்கல் செய்தார் ப.சிதம்பரம்.

தமிழ்நாடு, கர்நாடகா உள்பட 15 மாநிலங்களிலிருந்து 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, அந்த இடங்களுக்கு அடுத்த மாதம் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டு இருந்தது. அதனைத்தொடர்ந்து, ப.சிதம்பரத்தை வேட்பாளராக நேற்று அறிவித்தது காங்கிரஸ்.

காங்கிரஸ்-க்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களவை இடத்தை பெற மூத்த நிர்வாகியாக உள்ள ப.சிதம்பரம் மற்றும் கே.எஸ்.அழகிரி இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இருவரும் டெல்லியில் முகாமிட்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல, பாஜக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகத்திலிருந்தும், மகாராஷ்டிராவிலிருந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் போட்டியிடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/news7tamil/status/1531166845893771265

இந்நிலையில், இன்று பகல் 12 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மாநிலங்களவைத் தேர்தலில் தனது வேட்பு மனுவை அளிக்க இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு தனது உளமார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துகொள்வதாக ப.சிதம்பரம் தனது டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

அதன்படி, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் தனது வேட்புமனுவை தக்கல் செய்தார் ப.சிதம்பரம். தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. திமுக சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள் கடந்த 27-ம் தேதி தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.