OTT இயங்குதள தணிக்கை: மத்திய அரசு கொண்டுவந்த விதிமுறைகள்

நெட்ஃபிக்ஸ், அமேசான் ப்ரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் சோனி லிவ் போன்ற தளங்களில் அதிக ரசிகர்களைப் பெற்றுள்ள பல OTT நிகழ்ச்சிகளில் ஆபாசங்கள் மற்றும் தவறான கருத்துக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய தகவல்…

நெட்ஃபிக்ஸ், அமேசான் ப்ரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் சோனி லிவ் போன்ற தளங்களில் அதிக ரசிகர்களைப் பெற்றுள்ள பல OTT நிகழ்ச்சிகளில் ஆபாசங்கள் மற்றும் தவறான கருத்துக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்கம் முடிவு செய்துள்ளது.

OTT தளங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் உறுதியான சில நிலைப்பாட்டை எடுத்துள்ளார். படைப்பாற்றல் என்ற பெயரில் கொச்சையான மற்றும் தவறான வார்த்தைகளை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அனுராக் தாக்கூர், நெட்ஃபிக்ஸ், பிரைம் மற்றும் பிற OTT தளங்களில் சில நிகழ்ச்சிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் புகார்கள் குறித்து பேசினார். இந்தியாவில் இதுபோன்ற உள்ளடக்கத்தை தணிக்கை செய்வதில் இருந்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்கம் பின்வாங்காது என்று தெரிவித்தார். பெரிய திரையில் வெளியாகும் படங்கள் போலவே, OTT இயங்குதளங்களுக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்கம்  சென்சார் விதிகளை உருவாக்கியுள்ளது.

Netflix, Amazon Prime, இந்தியாவில் உள்ள பிற OTT தளங்களுக்கான விதிகள்:

நெட்ஃபிக்ஸ், டிஸ்னி மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் இந்தியர்களுக்கு சொந்தமானவை அல்ல என்பதால், அவற்றின் பெரும்பாலான உள்ளடக்கங்கள் வெளிநாட்டுத் தயாரிப்புகளால் தயாரிக்கப்படுகின்றன.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின்படி, திரையரங்குகளில் வெளியிடப்படும் திரைப்படங்களைப் போலல்லாமல், OTT இயங்குதளங்களுக்கு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் எந்தத் தொடர்பும் இல்லை மற்றும் அவற்றின் உள்ளடக்கத்திற்கு சுய மதிப்பீடு சான்றிதழை வழங்குகின்றன. OTTகள் தங்கள் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுக்கான வயது அடிப்படையிலான உள்ளடக்க மதிப்பீடுகளைக் காட்ட பட வேண்டும்.

OTT நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் இப்போது இந்திய சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட மற்றும் தேசத்தின் இறையாண்மையை அச்சுறுத்தும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் காட்டக் கூடாது.

Netflix, Prime, Sony Liv மற்றும் பிற இயங்குதளங்கள், அவற்றின் உள்ளடக்கம் தொடர்பான அனைத்துப் புகார்களையும் பெறுவதற்கும், அவற்றைத் தீர்ப்பதற்கும், இந்தியாவைச் சேர்ந்த ஒரு குறைதீர்ப்பு அதிகாரியைக் கொண்டிருக்க வேண்டும் என்பது போன்ற OTT தளங்களுக்கான விதிகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்கம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.