OTP-ஐ குறிவைத்து பயனர்களின் வாட்ஸ் அப்பிற்குள் நுழையும் ஹேக்கர்கள்!

ஹேக்கர்கள் தற்போது வாட்ஸ் அப் OTP-ஐ குறிவைத்து ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக ஒரு ஸ்மார்ட் போனில் வாட்ஸ் அப் பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் OTP எண் கொடுக்க வேண்டியது…

ஹேக்கர்கள் தற்போது வாட்ஸ் அப் OTP-ஐ குறிவைத்து ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிதாக ஒரு ஸ்மார்ட் போனில் வாட்ஸ் அப் பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் OTP எண் கொடுக்க வேண்டியது அவசியம். அதாவது நீங்கள் வாட்ஸ் அப்பை லாக் இன் செய்தவுடன் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஒரு OTP எண் வரும். அதனை கொடுத்தால்தான் வாட்ஸ் அப் அக்கவுண்டை இயக்க முடியும். OTP-ஐ குறிவைக்கும் ஹேக்கர்கள் உங்கள் வாட்ஸ் அப் மெசேஜிற்குள் எளிதாக நுழைந்து விடுகிறார்கள். உங்கள் மொபைல் போனை இயக்கி வாட்ஸ் அப் நிறுவனம் தானாக OTP அனுப்பும்படி செய்துவிடுகிறார்கள். சில சமயங்களில் உங்களால் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு, முழுவதுமாக ஹேக்கர்கள் கையில் சென்றுவிடும்.

உங்கள் அக்கவுண்டை ஹேக் செய்துவிட்டால், உடனடியாக அதனை reset செய்துவிட வேண்டும். அதன்பிறகு மீண்டும் அக்கவுண்டை புதிதாக ஆரம்பித்து கொள்ளலாம். பெரும்பாலும் உங்களுக்கு தானாக OTP வந்தால், வாட்ஸ் அப்பை Reset செய்வது நல்லது. இதன்மூலம் ஹேக்கர்களால் உங்கள் அக்கவுண்டை இயக்க முடியாமல் போகும். பெரும்பாலும் two-step authentication செய்து வைத்து கொள்வது நல்லது. இந்த ஆப்ஷன் உங்கள் வாட்ஸ் அப் கணக்கை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply