தமிழக அரசின் நடவடிக்கைகள் காரணமாக, நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், கொரோனா கட்டுக்குள் உள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, நவ.,30 அன்றுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் தளர்வுகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
- நாளை விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட் – 24 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது!
- GOLD RATE | தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு – சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு!
- ஆறாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் கைது!
- சிறந்த நடிகருக்கான விருது வென்ற சசிகுமார் – இயக்குநர் பாலா பாராட்டு!
- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது!
அப்போது, முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. வேளச்சேரி, தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்படாமல் நிரந்தர தீர்வு காண உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களிலும் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.







