இப்பொழுது கூட ஆணாதிக்கம் இருக்கிறது என திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் தமிழ் ரீமெக் படக்குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் செய்தியாளர்களை சந்த்தித்தார். அப்போதுசபரிமலையில் பெண்கள் அனுமதிக்க படவில்லை என்ற கேள்வியை பத்திரிக்கையாளர் எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்..
”இப்பொழுது கூட ஆணாதிக்கம் இருக்கிறது.ஆணாதிக்கம் என்பது கிராமத்து பக்கம் நிறைய இருக்கின்றது என்பது எனது கருத்து.
கடவுள் எல்லோருக்கும் ஒன்றுதான் ஆண்,பெண் என்ற வித்தியாசம் கிடையாது. எந்தக் கடவுளும் என்னுடைய கோவிலுக்கு அவர்கள் இவர்கள் வரக்கூடாது என எந்த கடவுளும் சொல்லவில்லை. சில சட்டங்கள் தான் சொல்கிறது இதனை நாம் உருவாக்கியதுதான்.
தனக்கு வரப்போற கணவர் சமைக்கா விட்டாலும், நான் சமைக்கா விட்டாலும் ஸ்விக்கியில் ஆர்டர் செய்து சாப்பிடுவேன்” என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.