’ஓச ஓச ஓச.. கேக்குதா என் பாச..’ வெளியானது மாமன்னன் படத்தின் ’ஏ மன்னா.. மாமன்னா..’ பாடல்!

’ஏ மன்னா.. மாமன்னா..’ தெருக்குரல் அறிவின் வரிகளில் மாமன்னன் படத்தின் ’ஓச ஓச ஓச… கேக்குதா என் பாச…’ பாடல் வெளியானது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ்…

’ஏ மன்னா.. மாமன்னா..’ தெருக்குரல் அறிவின் வரிகளில் மாமன்னன் படத்தின் ’ஓச ஓச ஓச… கேக்குதா என் பாச…’ பாடல் வெளியானது.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாமன்னன் திரைப்படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம், வடிவேலுவின் குரலில் ’ராசா கண்ணு’ என்னும் பாடல் வெளியானது. யுகபாரதி எழுதியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

மாமன்னன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தில் 7 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. வடிவேலுவின் பாடலை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய ’ஜிகு ஜிகு ரயில்’ சிறப்பு வீடியோவாக வெளியாகி டிரெண்ட் ஆனது.  அதன் பின்னர் மாமன்னன் படத்தில் இடம் பெற்ற காதல் பாடலான ‘நெஞ்சமே நெஞ்சமே’ பாடல் வெளியானது.

https://twitter.com/udhaystalin/status/1665939052200349696?s=46

இந்நிலையில் மாமன்னன் படத்தின் நான்காவது Lyrical வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘மன்னா மாமன்னா’ பாடலை தெருக்குரல் அறிவு எழுதி பாடியுள்ளார். இப்பாடலை சிறப்பு வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலின் வீடியோவில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு  ஆகியோரின் புகைப்பட வீடியோவும் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த அப்டேட்டுகளினால் மாமன்னன் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.