திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

பாஜகவின் கிளைக்கழகமாக அதிமுக மாறிவிட்டது என்று மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர். இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, திமுக எம்.பி.கனிமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மனோஜ் பாண்டியன், பாஜகவின் கிளைக்கழகமாக அதிமுக மாறிவிட்டது. திராவிடக் கொள்கைகளை முழுமையாக பாதுகாக்கும் தலைவராகவும், தமிழக உரிமைகளை பாதுகாக்கும் தலைவராகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதால் திமுகவில் இனைந்தேன். மேலும், இன்று மாலை 4 மணிக்கு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.