ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளருடன் சந்தித்தது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழக
அரசின் சார்பில் சென்னை கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில்
அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு டிடிவி தினகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
விடியல் ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது. என்ஐஏ சோதனை, போதைப் பொருட்கள் போன்றவை கடந்த ஆட்சியை போன்று நீடித்துக் கொண்டுள்ளது. இதை எல்லாம் பார்த்தால் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்ற தேர்தல் வரும் என்ற யூகத்தின் அடிப்படையில் தெரிவித்தேன்.
மத்தியில் உள்ளது இரண்டு கட்சிகள் தான். பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டுடன்
ஏதாவது ஒன்றுடன் கூட்டணி அமைத்து தான் ஆக வேண்டும். தேர்தல் நேரத்தில் அதை
தெரிவிப்பேன்.

தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் சந்திப்பு நட்பு ரீதியான
சந்திப்பு தான் அதில் அரசியல் இல்லை என்றார் தினகரன்.
முன்னதாக, சமீபத்தில் டிடிவி தினகரன் தேனி சென்றபோது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை வரவேற்றனர்.







