எரிபொருள் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலியால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதேபோல், கேஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலையும் ஏற்றம் கண்டுள்ளன. இந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, கேஸ் சிலிண்டருக்கு பாடைகட்டி, அதை ஊர்வலமாக கொண்டு வந்து நூதன முறையில் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அண்மைச் செய்தி: இலங்கையில், பதவியேற்றனர் புதிய அமைச்சர்கள் – அதிபர் கோட்டபய ராஜபக்ச
இதேபோல், மயிலாடுதுறையில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: