ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து இரண்டு நேபாளிகள் உட்பட 143 பயணிகளுடன் 6-வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது.
காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலால் அங்கு மனிதாபிமான பேரழிவு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர். மருத்துவமனைகள் அனைத்தும் படுகாயமடைந்தவர்களால் நிரம்பி வழிகின்றன.







