உதவிப் பொருட்கள் அடங்கிய 14 டிரக்குகளின் 2ஆவது வாகன அணிவகுப்பு காசவுக்கு செல்ல அனுமதி!…

காஸாவில் மனிதநேயப் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், உதவிப் பொருட்கள் அடங்கிய 14 டிரக்குகளின் 2ஆவது வாகன அணிவகுப்பு காசவுக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலால் அங்கு மனிதாபிமான பேரழிவு…

காஸாவில் மனிதநேயப் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், உதவிப் பொருட்கள் அடங்கிய 14 டிரக்குகளின் 2ஆவது வாகன அணிவகுப்பு காசவுக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலால் அங்கு மனிதாபிமான பேரழிவு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர். மருத்துவமனைகள் அனைத்தும் படுகாயமடைந்தவர்களால் நிரம்பி வழிகின்றன.

இந்த நிலையில், உதவிப் பொருட்களை ஏற்றிச் செல்லும் 14 டிரக்குகள் அடங்கிய இரண்டாவது வாகன அணிவகுப்பு காசாவுக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டிருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. காசாவில் பேரழிவை சந்தித்து வரும் மக்களுக்கு இது சிறிய நம்பிக்கை கீற்றாக உள்ளது என ஐநா கூறியுள்ளது.

இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தேவைப்படும் பாலஸ்தீனர்களுக்கு உதவிப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என பைடன் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரத்தில் பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக் கொள்ளாவிட்டால் காசாவில் உதவிப் பொருட்கள் விநியோகத்துக்கு உத்தரவாதம் அளிக்க கூடாது என இஸ்ரேஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் இடமர் பென் ஜிவிர் (Itamar Ben – Gvir)கூறியுள்ளார்.

இதனிடையே சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு உட்பட்டு தீவிரவாதத்துக்கு எதிராக தன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருப்பதாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் அடுத்த வாரம் இஸ்ரேலுக்கு பயணம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் இரு முகாம்களை வான்வழி தாக்குதல் மூலம் அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. பீரங்கி வண்டிகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த அவை திட்டமிட்டிருந்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.