குளுகுளு சீசனை அனுபவிக்க உதகைக்கு சிறப்பு ரயில் – சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

உதகையில் கோடை சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறப்பு ரயில் சேவைவையை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.இதனால் உதகைக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் மலைவாழ் சுற்றுலாத்…

உதகையில் கோடை சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறப்பு ரயில் சேவைவையை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.இதனால் உதகைக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் மலைவாழ் சுற்றுலாத் தலங்களில் நீலகிரி மாவட்டத்தின் உதகை என்றழைக்கப்படும் ஊட்டி முக்கியாமான ஒன்றாகும். ஆண்டுதோறும்
கோடைகாலங்களில் இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர்.

இவர்களை மகிழ்விக்கும் வகையில் ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மலர்கண்காட்சி உட்பட ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் வகையில் தெற்கு ரயில்வேயின் சார்பில் உதகை-கேத்தி வரை ஜாய்ரைடு என்ற பெயரில் சிறப்பு ரயில் சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

வார இறுதி நாட்களான வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இயக்கப்படும்
இந்த ரயிலில் பயணிக்க முதல் வகுப்பு கட்டணமாக நபர் ஒன்றுக்கு 630 ரூபாயும், இரண்டாம் வகுப்பு கட்டணமாக 465 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சூப்,டீ,காபி மற்றும் நினைவு பரிசாக சாவிகொத்து உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

—-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.