மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி என்று கோவில் நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பை திரும்பப் பெறுவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நிர்வாக காரணங்களுக்காக நடைமுறைப்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதாக தொடர்ந்து வழக்கம் போல் பக்தர்கள் நாளை முதல் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது ஒமிக்ரான் தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37ஆக இருந்த நிலையில் தற்போது 38ஆக அதிகரித்துள்ளது.
தற்போது பிரிட்டனிலிருந்து கேரளா வந்த ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








