சமூக நீதி, பெண்ணுரிமை பற்றி பேசும் தகுதி பாஜகவிற்கு மட்டுமே உண்டு என தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை பிராட்வே டான் போஸ்கொ பள்ளியில் பாஜக சார்பில் “துறைமுகத்தில் தாமரையின் சங்கமம்” எனும் தேர்தல் மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல். முருகன், தமிழக பாஜக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வருவதாகவும், திமுக தலைவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் இருந்து திமுகவினர் ஓடஓட விரட்டப்படுவர் எனவும் தெரிவித்தார். மேலும், காய்கறிகளுக்கு விலை வைப்பது திமுக கமிஷன் ஏஜெண்டுகள் எனவும், அதனால்தான் வேளாண் சட்டங்களை எதிர்ப்பதாகவும் குற்றம்சாட்டினார். இறுதியாக, சமூக நீதி, பெண்ணுரிமை பற்றி பேசும் தகுதி பாஜகவிற்கு மட்டுமே உண்டு என்று அவர் குறிப்பிட்டார்.







