முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

கண்ணீரில் வெங்காய விவசாயிகள்; துயர்துடைக்க அரசு முன்வருமா?


தங்கபாண்டியன்

ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெங்காயத்தின் மொத்த கொள்முதல் விலை, கடும் சரிவை சந்தித்துள்ளதால் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சைவ உணவோ, அசைவ உணவோ அரிதினும் அரிதாக ஒரு சிலரைத்தவிர, பெரும்பான்மையானோருக்கு, தக்காளி,வெங்காயம்,உருளைக்கிழங்கு ஆகிய மூன்றும் உணவில் மிகவும் அவசியமானது. இந்த மூன்றில் எது இல்லா விட்டாலும்,வெங்காயம் இல்லாமல் உணவு நிறைவடையாது. வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியதால் ஆட்சியை இழந்த வரலாறும் உண்டு.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த ஆண்டு வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வெங்காயத்தின் விலை சதமடிக்கும். வெங்காயத்தை வாங்கும் போதே ,பொது மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும். பிறகு விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுக்கும். இப்போது வெங்காயத்தின் கொள்முதல் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்களின் கண்ணீரை துடைக்க அரசு முன்வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

உற்பத்தி செலவாக ,வெங்காயத்திற்கு விதை முதல் விளைச்சல் வரை கணக்கிட்டால் கிலோ ஒன்றுக்கு 15 ரூபாய் முதல் முதல் 17 ரூபாய் வரை செலவாகிறது. இதையடுத்து விற்பனை மையம் கொண்டு செல்வது, குளிர்பதன கிடங்குகளில் சேமித்து வைத்தல் மற்றும் இதர செலவுகளுக்காக கிலோ ஒன்றிற்கு 5 ரூபாய் வரை செலவாகிறது. ஆகையால் மொத்தத்தில் வெங்காயத்தின் விலை 20 ரூபாய் முதல் 22 ரூபாயாக உள்ளது. ஆனால் விவசாயிகளிடமிருந்து ,கொள்முதல் செய்யப்படும் போது , வெங்காய விவசாயிகள் கிலோ ஒன்றுக்கு 13 ரூபாய் முதல் 17 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இதனால் வெங்காயத்தை விளைவிக்கும் விவசாயிகள் ஒரு கிலோ வெங்காயத்திற்கு 7 ரூபாய் வரை நஷ்டத்தை சந்திக்கின்றனர். எனவே ஒரு கிலோ வெங்காயத்திற்கு அரசு 10 ரூபாய் மானியமாக தந்து விவசாயிகளை இழப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும் என கூறுகின்றனர்.

நடப்பு ஆண்டில், நாட்டில் வெங்காய உற்பத்தி 32 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது. கடந்த ஆண்டில் வெங்காய உற்பத்தி 26 மில்லியன் மெட்ரிக் டன். கடந்த ஆண்டு குறைந்த மகசூல் மற்றும்,அதிகரித்த உற்பத்தி செலவுகள், பருவம் தவறி பெய்த மழை, ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள், கொரோனா தொற்றுக்கு பின் உள்நாட்டிலும் குறைந்த விலை ஆகிய காரணிகளால் விவசாயிகளை மற்ற பயிர்களுக்கு மாற்ற தூண்டியது.

இந்த ஆண்டு கணிசமாக வெங்காய உற்பத்தி அதிகரித்தது. இந்தியாவிலிருந்து எகிப்து,துருக்கி, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான வெங்காய ஏற்றுமதி அளவு குறைந்து விட்டது.அதே சமயம் பங்களாதேசில் வெங்காயம் பயிரிடப்படுவதாலும் வெங்காய ஏற்றுமதி அளவு குறைய மற்றொரு காரணமாகி விட்டது.பாகிஸ்தான் இப்போது நீரில் மூழ்கியுள்ளதால் ,வெங்காயத்தின் தேவை அடுத்த மாதம் அதிகமாகும் போது வெங்காய விவசாயிகளுக்கு சற்று கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புள்ளது என்று விவசாய நிபுணர்கள் கூறுகின்றனர்.

வெங்காயம் பயிரிடும் விவசாயிகளின் கண்ணீரை துடைக்க, உரிய விலை கிடைக்க அரசு வழி செய்ய வேண்டும். வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்க கூடாது. விலை வாசி உயர்வின் போது வர்த்தகர்களை மட்டுமே கணக்கில் கொள்ளாமல், விளை பொருளை விளைவித்த விவசாயிகளையும் அரசு கணக்கில் கொள்ள வேண்டும். இல்லையேல் வெங்காயத்தை விளைவிக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து, வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

-தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“பல் துலக்கி விட்டு முத்தம் கொடு”: மனைவியை கொன்ற கணவர்

Web Editor

’உங்க அற்புதமான திறமையை …’ தனுஷை பாராட்டும் அக்‌ஷய்குமார்

EZHILARASAN D

இலங்கைக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும்: கோத்தபய ராஜபக்ச

Mohan Dass