சின்ன வெங்காயத்தின் விலை விழ்ச்சி: விவசாயிகள் வேதனை

ஆத்தூர் தினசரி காய்கறி சந்தையில், சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக உணவுகளின் சமையலில் பயன் படுத்தப்படும் மிக முக்கிய பொருளாக சின்ன வெங்காயம் உள்ளது, இதனிடையே சேலம் மாவட்டம்…

ஆத்தூர் தினசரி காய்கறி சந்தையில், சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழக உணவுகளின் சமையலில் பயன் படுத்தப்படும் மிக முக்கிய பொருளாக
சின்ன வெங்காயம் உள்ளது, இதனிடையே சேலம் மாவட்டம் தலைவாசல் தினசரி
காய்கறி மார்க்கெட் தமிழகத்திலேயே 2 வது பெரிய காய்கறி மார்க்கெட்டாக செயல்பட்டு
வருகிறது, இந்த மார்க்கெட்டிற்கு ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான
தலைவாசல் , சிறுவாச்சூர், ஊனத்தூர், வீரகனூர், கச்சிராபாளையம், சின்னசேலம்,
பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயமும்
கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பெரிய வெங்காயமும் தினமும்
டன் தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருகின்றன.

 

இங்கிருந்து பிற மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த சில
மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயத்தின் விலை உச்சத்தை எட்டியது, ஒரு
கிலோ 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனையானது, இதனிடையே இரண்டு மாதங்களுக்கு
முன்பு நல்ல மழை பெய்ததால் விவசாயிகள் அதிக அளவில் சின்ன வெங்காயம் சாகுபடி
செய்துள்ளனர்.


தற்போது இவை அறுவடை செய்யப்படுகின்றன. கடந்த நவம்பர், டிசம்பர்
மாதங்களில் பட்டறை போடப்பட்ட சின்ன வெங்காயமும் தற்போது தலைவாசல் தினசரி
சந்தைக்கு விற்பனைக்கு வருவதால் வரத்து அதிகரித்து ரகத்திற்கேற்ப சின்ன
வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விலை வீழ்ச்சியடைந்ததால்
விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர், மேலும் விவசாய இடுபொருட்கள், உழவு இயந்திரவாடகை, கூலி ஆகியவை உயர்ந்து விட்டதால், ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.40-க்கு விற்பனை செய்தால் தான் விவசாயிகளுக்கு கிலோவுக்கு பத்து ரூபாய்
லாபம் கிடைக்கும். ஆனால் தற்போது போட்ட முதலீட்டை கூட முடியாமல் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்க்கு ஆளாகியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.