மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் சேவை ஆக.3ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கல்லார் – ஆர்டர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகளும், மரங்களும் சரிந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், மேட்டுப்பாளையம் – உதகை இடையே இன்று இயக்கப்படவிருந்த அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணி தொடர்வதால் நாளை, நாளை மறுநாள் என மேலும் இரண்டு நாட்களுக்கு மேட்டுப்பாளையம் -உதகை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.







