சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், ஊழியர் உடல் தூக்கி வீசப்பட்டு மரத்தில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வி.சொக்கலிங்கபுரத்தில், அய்யனார் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் ஆனந்தராஜ் என்பவர் பணியாற்றி வந்தார். இன்று காலை ஆனந்தராஜ் பட்டாசு மருந்து நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதால் ஆனந்தராஜ் உடல் சிதறிய நிலையில் தூக்கி வீசப்பட்டார். மரத்தில் தொங்கிய ஆனந்தராஜின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெடிவிபத்து ஏற்பட்ட அறை முற்றிலுமாகத் தரைமட்டமானது.
இந்த சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.