நல்லாட்சியை முன்னெடுப்பதை நோக்கி முன்னேற வேண்டும்: ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

சுதந்திரப் போராடத்தின் போது சுயராஜ்யம் வேண்டி மக்கள் போராடினர். இப்போது இதே போன்ற ஒரு உணர்வை ஐபிஎஸ் அதிகாரிகளிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன். இன்றைக்கு நீங்கள் நல்லாட்சியை முன்னெடுப்பதை நோக்கி முன்னேற வேண்டும் என பிரதமர்…

சுதந்திரப் போராடத்தின் போது சுயராஜ்யம் வேண்டி மக்கள் போராடினர். இப்போது இதே போன்ற ஒரு உணர்வை ஐபிஎஸ் அதிகாரிகளிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன். இன்றைக்கு நீங்கள் நல்லாட்சியை முன்னெடுப்பதை நோக்கி முன்னேற வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளார்.

ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் போலீஸ் அகதாமியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி நிறைவு பெற்று செல்லும் ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் டெல்லியில் இருந்த படி பிரதமர் நரேந்திரமோடி காணொலி வாயிலாக பேசினார். அப்போது நரேந்திரமோடி கூறியதாவது:

“இந்தியாவின் ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு மட்டத்திலும் படிப்படியாக மாற்றத்தை நோக்கி பயணிக்கும் காலகட்டத்தில் உங்கள் பணி தொடங்கி இருக்கிறது. வரும் 25 ஆண்டுகளில் உங்கள் பணியானது, இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த 25 ஆண்டுகளாக இருக்கப்போகிறது. இந்த பெரிய இலங்கை நோக்கியே நீங்கள் உங்கள் மனதை அல்லது கவனத்தை நீங்கள் திருப்ப வேண்டும்.

ஆகஸ்ட் 15ம் தேதி 75 வது சுதந்திரத்தினத்தைக் கொண்டு வருகிறது. கடந்த 75 ஆண்டுகளில் நல்ல காவல் சேவையை கட்டமைக்க இந்தியா முயற்சி செய்தது. அண்மை காலங்களில் காவல்துறை பயிற்சி பிரிவின் கட்டமைப்பில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

1930-45க்கு இடையே ஒரு அலையாக நாட்டின் இளைஞர்கள் சுதந்திரத்துக்காக பாடுபட முன் வந்தனர். ஒட்டு மொத்த இளைஞர்களும் ஒரே ஒரு குறிக்கோளுக்காக ஒன்றிணைந்தனர். அந்த சமயத்தில் சுயராஜ்யம் வேண்டி மக்கள் போராடினர். இப்போது இதே போன்ற ஒரு உணர்வை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன். இன்றைக்கு நீங்கள் நல்லாட்சியை முன்னெடுப்பதை நோக்கி முன்னேற வேண்டும்.” இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.