தமிழ்நாட்டில் 2020-21 கல்வியாண்டில் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் JEE தேர்விற்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஜே இ இ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நுழைவு தேர்வுக்கான விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் தமிழக மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் 2020 ஆம் ஆண்டு கொரோனா சூழலில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள்.
மேலும் 2020 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மதிப்பெண்கள் ஏதும் வழங்கப்படாமல் தேர்ச்சி என்று மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக மாணவர்கள் ஜே இ இ தேர்வை எழுதும் வகையில்,தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தேசிய தேர்வு முகமை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2020-21ம் கல்வியாண்டில் கொரோனா தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தப்படாமல், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், தற்போது 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் JEE தேர்வு எழுத 10ம் வகுப்பு மதிப்பெண்ணை குறிப்பிடுவதில் சிக்கல் உள்ளதாகவும், இதனை பூர்த்தி செய்யாமலேயே விண்ணப்பிக்கும் வசதி வேண்டும் என தேசிய தேர்வு முகமையிடம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளதாகவும், தமிழக மாணவர்கள் பதற்றமடையாமல் JEE தேர்விற்கு தங்களை தயார் செய்யலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது