நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படத்தையும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய வித்தியாச கதைக்களம் கொண்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஹெச்.வினோத், அதன்பிறகு நடிகர் அஜித்துடன் கூட்டணி சேர்ந்தார். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெற்றியை பெற்றதோடு, விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து வினோத் இயக்கத்திலேயே அடுத்த படமான வலிமையிலும் நடித்தார். ஒரு ஆண்டுக்கு மேலாக வலிமை அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்புதான் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர்ஸ் வெளியிடப்பட்டது. திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் அஜித் ஹெச்.வினோத்துடன் மூன்றாவது முறையாக இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மங்காத்தா திரைப்படத்திற்குப் பிறகு இந்த திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அஜித் தோன்றுகிறார் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே மங்காத்தா திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் அஜித் தோன்றியது குறிப்பிடத்தக்கது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் இணைந்திருந்தார் அஜித். அதேபோலவே ஹெச்.வினோத்துடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கிறார்.