இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று காலை மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து எம்.பி. டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார்.







