“எம்.ஜி.ஆர் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்” – தவெக தலைவர் விஜய்!

எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் 109வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்த தினத்தையொட்டி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

“தமிழக மக்களின் நெஞ்சங்களில்
பொன்மனச் செம்மலாக,
ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக,

அண்ணாவின் ஜனநாயகப் பாதையில், சாமானியர்களுக்கும் அதிகாரமளித்து, மக்களாட்சி செய்த எம்.ஜி.ஆர் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.