நகைக்கடையை சூறையாடிய முதியவர் – சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கன்னியாகுமரி அருகே முன்விரோதத்தில் முதியவர் நகைக்கடையை சூறையாடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தொலையாவட்டம் பகுதியை சேர்ந்தவர் மரியதாஸ்(48). இவர் அதே…

கன்னியாகுமரி அருகே முன்விரோதத்தில் முதியவர் நகைக்கடையை சூறையாடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தொலையாவட்டம் பகுதியை சேர்ந்தவர்
மரியதாஸ்(48). இவர் அதே பகுதியில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும் மாங்கரை பகுதியைச் சேர்ந்த ரத்தினவேல் (55) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதனால் அடிக்கடி கடைக்கு வரும் ரத்தினவேல் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று கையில் வெட்டுக் கத்தியுடன் நகைக்கடைக்குள் நுழைந்த ரத்தினவேல் நகைகள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழைகளை உடைத்து, அதற்குள்
வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை சேதப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மரியதாஸ் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், கருங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.