முக்கியச் செய்திகள் தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்; தேர்தல் ஆணையம்

சட்டத்திற்குட்பட்டு செயல்பட்டால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எவ்வித பிரச்னையும் வராது என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 28-ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கடந்த அக்டோபர் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆனால், நகர்ப்புற தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில், மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகான நகர்ப்புற தேர்தலை விரைந்து நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இதையடுத்து சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் சேலத்தில் ஆலோசனை நடத்தினார். சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனைத்து துறை அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், தேர்தல் பணிகளை சட்டத்திற்குட்பட்டு செய்தால் எவ்வித பிரச்னையும் வராது என அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவுரை வழங்கினார்.

Advertisement:
SHARE

Related posts

இஸ்ரேலில் இருந்து இந்தியாவிற்கு வந்த ஆக்சிஜன்!

Halley karthi

’என் வீட்டுத் தோட்டத்தில்…’ நடிகர் சிவகார்த்திகேயனின் பசுமை தோட்டம்!

Gayathri Venkatesan

முன்விரோதம் காரணமாக நண்பனை கொலை செய்த 4 பேர் கைது!

Halley karthi