பாட்னா ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரயில்களில் ஏறுவதற்காகக் காத்திருந்த பயணிகள் மூன்று நிமிடங்களுக்கு 10 பிளாட்ஃபார்ம் டிவி திரைகளிலும் ஆபாச காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே காவல்துறை டானாப்பூர் கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் வீடியோக்கள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்பும் ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.மேலும், ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) அதிகாரிகள் உடனடியாக நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு ஒளிபரப்பை நிறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தை உறுதி செய்த டானாபூரில் உள்ள டிஆர்எம் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் பிரபாத் குமார், “இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி ஒப்பந்தத்தை ரத்து செய்யும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளோம். நிறுவன அதிகாரிகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளோம். இது சகிக்க முடியாத செயல். சம்பவம். இந்த நிறுவனத்தைக் கருப்பு பட்டியலில் சேர்ப்போம் என தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலையும் அதே ரயில் நிலையத்தில் நடந்ததாக சில பயணிகள் மீண்டும் ரயில்வே அலுவலகத்தில் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.







