மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.18,661 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பட்ஜெட்டில் மருத்துவத் துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர்…

பட்ஜெட்டில் மருத்துவத் துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து, 2023–24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.

இதையும் படிக்க: மதுரை, கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டம் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

இந்த உரையில் பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் மேம்பாட்டுதுறை, சுற்றுச்சூழல் மேம்பாடு என பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. மருத்துவத் துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர், தமிழ்நாடு பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தொற்றாநோய்கள் தொடக்க நிலையில் கண்டறியப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. தொழிற்சாலைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை தொற்றிலிருந்து தடுக்க 8 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களை தேடி மருத்துவத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் 5 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. கிண்டியில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டில் திறந்து வைக்கப்படும். வடசென்னை மக்களுக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் 147 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
மருத்துவத் துறைக்கு 18,661 கோடி மொத்தமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.