டிரெண்டிங்கில் நம்பர் 1… “லியோ” பட ட்ரெய்லருக்கு ரசிகர்கள் வரவேற்பு…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’. திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை 6.30 மணிக்கு வெளியாகியது. நேற்று வெளியான விஜய்யின் டிரைலர் மிகப்பெரிய கவனத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. வெளியான ஐந்து…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’. திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை 6.30 மணிக்கு வெளியாகியது.

நேற்று வெளியான விஜய்யின் டிரைலர் மிகப்பெரிய கவனத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. வெளியான ஐந்து நிமிடங்களிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களால் இந்த டிரைலர் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்தது.

ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே ஒரு ஆக்ஷன் விருந்தை இந்த டிரைலர் கொடுத்துள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். லியோ’ படத்தின் டிரெய்லர் வெளியான 5 நிமிடங்களில் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்த நிலையில், 3 மணி நேரத்தில் 12 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.