“புதுச்சேரியில் பாஜக தலைமையில் ஆட்சி அமையும்” – அமித் ஷா உறுதி

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் களம்…

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. இந்தநிலையில், தேர்தல் பரப்புரை மற்றும் கட்சி நிகழ்ச்சிகளுக்காக மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்றிரவு சென்னை வந்தடைந்தார். அதன்பின் இன்று காரைக்கால் சந்தைத் திடலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், புதுச்சேரிக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும், அவற்றை, காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை என குற்றம்சாட்டினார். புதுச்சேரியில், படித்த இளைஞர்கள் 75 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதாக குறிப்பிட்ட அவர், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் வேலையின்மை 40 சதவீதமாக குறைக்கப்படும் என்று உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய அவர் நடக்க உள்ள சட்ட மன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.