கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த வட மாநில இளைஞர் பலி

ராமநாதபுரம் அருகே தனியார் எண்ணெய் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதில் வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் உள்ள மச்சூர்…

ராமநாதபுரம் அருகே தனியார் எண்ணெய் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதில் வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் உள்ள மச்சூர் கிராமத்தில் தனியார் மீன் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது இந்த நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நபின் ஓரா, சுனில் மற்றும் அஜய், ஆகிய மூன்று வட மாநில வாலிபர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டியில் மூன்று வாலிபர்கள் இறங்கி அதனை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி மூவரும் மயங்கி விழுந்துள்ளனர். இதனையடுத்து அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மூவரில் நபின் ஓரா என்ற 21 வயது வாலிபர் உயிரிழந்தார். மேலும் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இந்த தனியார் நிறுவனத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.