முக்கியச் செய்திகள் தமிழகம்

ஹுஸ்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ரூ.1 லட்சம் – நடிகர் ஆரி

ஹுஸ்டன் பல்கலைக்கழகம் தமிழ் இருக்கைக்காக ரூ.1 லட்சம் வழங்குவதாக நடிகர் ஆரி அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட உள்ள தமிழ் இருக்கைக்கான தகவல்கள் அடங்கிய தமிழ் மொழி செயலியை சென்னை ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் விஜிபி சந்தோசம் தலைமை ஏற்றார். நடிகர் ஆரி, வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தலைவர் கால்டுவெல் வேல்நம்பி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

தமிழ் மொழியின் சிறப்புகள் அடங்கிய இணைய தமிழ் நூலகம், தமிழ் நாட்காட்டி குறிப்புகள், தமிழ் எழுத்து வரைவுகள் ஆகியவற்றை மூலம் மிக எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியை பொது பயன்பாட்டிற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

இதில் பங்கேற்று பேசிய நடிகர் ஆரி, “ஆட்சி மாற்றம் வெறும் காட்சி மாற்றமாக இல்லை. தமிழ் மொழி படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை என்ற அறிவிப்பு மூலம் தாய்மொழி கல்வியின் முக்கியத்துவத்தை திமுக ஆட்சி முன்னெடுத்துள்ளது.

ஹுஸ்டன் பல்கலைக்கழகம் தமிழ் இருக்கைக்காக ரூ.1 லட்சம் அளிக்கிறேன். தாய் மொழி அவமானம் இல்லை நம் அடையாளம்.மொழி சார்ந்த கலை சார்ந்த அடையாளங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன்.” என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் :-

ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான தமிழ் செயலி ஒரு மையில் கல்லாக அமைந்துள்ளது.தாய்மொழி தமிழை தாயாக பாவித்து வாழ்த்தும் பாடல் பாடும் போது எழுந்து நிற்பது நமது பண்பாடு. தமிழ் தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்பது தமிழுக்கு செய்யும் மரியாதை என்றார்.

மேலும்,சட்டமன்றம் தற்போது தற்காலிக இடத்தில் உள்ளது. சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வது குறித்து முதல்வர் சரியான நேரத்தில் முடிவெடுப்பார்கள் என்றார்.

Advertisement:
SHARE

Related posts

அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது: அதிமுக வேட்பாளர் வெங்கடாசலம்

Gayathri Venkatesan

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்

Gayathri Venkatesan

ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்!

Halley Karthik