ஆன்லைன் கடன் செயலி மூலம் பணம் பெற்று திருப்பி செலுத்த முடியாத இளைஞரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதால் மனமுடைந்து இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொபைல் ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் பெறுபவர்களை கடன் கொடுக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்சியை சேர்ந்த ஒருவர் ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்ற நிலையில் தொடர்ந்து மிரட்டல்கள் வந்த வண்ணமுள்ளதாக புகார் அளித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் சென்னை சூளைமேடு சேர்ந்த பாண்டியன் என்கிற இளைஞர் ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் பணம் பெற்று செலுத்த முடியாமல் இருந்த இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டு உயிரிழந்துள்ளார்.
செயலி மூலம் பணம் பெற்ற இளைஞர் அதனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஆதார் அட்டையில் இருந்து அவரது புகைப்படத்தை எடுத்து அதை ஆபாசமாக சித்தரித்து அவரது உறவினர்கள் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியதால் மனமுடைந்து வீட்டிலேயே தூக்கிட்டு உயிரை மாய்த்துக்
கொண்டுள்ளார் என காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
சமீப நாட்களாக இந்த பிரச்னை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், ரிசர்வ் வங்கியில் பதிவு செய்த கடன் கொடுக்கும் நிறுவனத்திடமிருந்து மட்டுமே கடன் பெற வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.
இவ்வாறு பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் சக்தி காந்ததாஸ் கூறியிருந்தார். அதேவேலையில் உள்ளூர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார் சைபர் கிரைம் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.