“நான் மீண்டும் வருவேன்” : டெர்மினேட்டருடன் ஒப்பிட்டு பாஜக வெளியிட்ட பிரதமர் மோடி போஸ்டர் வைரல்!

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக மோடி பதவியில் நீடிப்பார் என்பதை குறிக்கும் வகையில், ‘தி டெர்மினேட்டர் பட அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரை மையமாக வைத்து வெளியான போஸ்டர் பாஜகவினர் பகிர்ந்து வருகின்றனர். 2024ஆம் ஆண்டு…

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக மோடி பதவியில் நீடிப்பார் என்பதை குறிக்கும் வகையில், ‘தி டெர்மினேட்டர் பட அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரை மையமாக வைத்து வெளியான போஸ்டர் பாஜகவினர் பகிர்ந்து வருகின்றனர்.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. பாஜகவுக்கு எதிராக சுமார் 26 கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற ஓரணியில் திரண்டுள்ளன.

கடந்த ஜூன் மாதம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் பெங்களூருவிலும் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மூன்றாவது கூட்டம் மும்பையில் இன்றும் நாளையும், நடைபெறுகிறது.

இதேபோல் ஆளும் கூட்டணியான பாஜகவும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடி மோடியே பிரதமராக தொடர்வார் என்பதை குறிக்கும் வகையில் தி டெர்மினேட்டர் பட அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் போல் பிரதமர் மோடி படத்துடன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கையில் துப்பாக்கிக்கு பதிலாக தாமரை வைத்து இருப்பதை போல் அந்த போஸ்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை வெளியிட்டு பாஜக, பிரதமர் மோடியை தோற்கடிக்க முடியும் என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. கனவு காணுங்கள்! டெர்மினேட்டர் தான் எப்போதும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டரை பாஜகவினர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.