தமிழ்நாட்டில், 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான, தேர்தல் பார்வையாளர்களை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
தமிழ்நாட்டில், அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான தேர்தலை கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி வீதம், தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதே போல, மற்ற 28 மாவட்டங்களில், நிரப்பப்படாத பதவிகளுக்காக நடைபெறும் தேர்தலை கண்காணிக்க, 11 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேட்புமனு தாக்கல் நிறைவடையும் 22ம் தேதி முதல் டேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பு பணிகளை தொடங்குவார்கள் எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.







