தேசியக்கொடியை ஏற்றுவதற்கு எந்த வேண்டுகோளும், கட்டளையும் அவசியம் இல்லை – எம்.பி. கனிமொழி

தேசியக்கொடியை ஏற்றுவதற்கு எந்த வேண்டுகோளும், கட்டளையும் அவசியம் இல்லை என்றும், எல்லோருக்கும் இந்த நாடு உரிமையானது தான் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில்,…

தேசியக்கொடியை ஏற்றுவதற்கு எந்த வேண்டுகோளும், கட்டளையும் அவசியம் இல்லை என்றும், எல்லோருக்கும் இந்த நாடு உரிமையானது தான் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில், பழமை புதுமை போற்றும் நாடக விழா
சென்னை மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்றது. இயல் இசை நாடக மன்றத்தின் கலை பண்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற நாடக விழாவில்
திமுக மகளிர் அணி செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்று நாடகத்தை கண்டு ரசித்து இறுதியாக நாடக கலைஞர்களை கௌரவித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இயல் இசை நாடக மன்றம் சார்பில் நான்கு நாட்கள் மிகச்சிறப்பாக பழைய நாடகங்களை
ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார்கள். நவீன நாடகமாக இன்று நாடகங்கள்
அரங்கேற்றப்பட்டன என்றார். பிரதமர் நாளை முதல் இல்லங்கள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுகவினர் தேசிய கொடியை இல்லங்களில் ஏற்றுவீர்களா என்ற கேள்விக்கு, தேசியக்கொடியை ஏற்றுவதற்கு எந்த வேண்டுகோளும், கட்டளையும் அவசியம் இல்லை. எல்லோருக்கும் இந்த நாடு உரிமையானது தான். வீட்டில் நான் கொடி ஏற்றுகின்றேனா என நாளைக்கு வந்து பாருங்கள் என்றார்.

மேலும், கலை பல்வேறு புதுமையான வடிவங்களில் வரத் தொடங்கியுள்ளது. புதிய
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சொல்லப்படும் நாடகங்களும் இருக்க வேண்டும்.
பழமையான நாடகத்தின் தொடர்ச்சி என்பது மிக முக்கியமானது என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.