கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக விரைவில் முடிவு : ஐ.பெரியசாமி

கூட்டுறவு சங்கங்களில் தேர்தல் நடத்துவது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப் படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாள ராக அமைச்சர் ஐ.பெரியசாமி…

கூட்டுறவு சங்கங்களில் தேர்தல் நடத்துவது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப் படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாள ராக அமைச்சர் ஐ.பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தேர்தல் பணி தொடர்பாக நெல்லை வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய ஐ.பெரியசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 4 மாத காலத்தில் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருவதாகக் கூறி னார்.

கடந்த ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கியதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகத் தெரிவித்த அவர், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டுறவு சங்கங்களில் தேர்தல் நடத்துவது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.