பாஜகவில் சேரும் திட்டமில்லை என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தஞ்சாவூர் கிருஷ்ணசாமி வாண்டையார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்தியா சிமெண்ட் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார். இதையடுத்து அவரை முக்கிய பிரமுகர்கள் பலர் சந்திக்க உள்ளனர். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவரும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உறவினருமான T.கிருஷ்ணசாமி வாண்டையார் அமித்ஷாவை சந்தித்து பா.ஜ.க.வில் சேர இருப்பதாக தகவல் வெளியானது.
இது குறித்து அவர் நியூஸ் 7 தமிழிடம் கூறுகையில், “சென்னையில் அமித்ஷாவை சந்தித்து பாஜகவில் சேர இருப்பதாக வரும் தகவல் வதந்தி. நான் தற்போது தஞ்சாவூரில் உள்ளேன். முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார். நான் மறுத்து விட்டேன். இப்போது யாரும் என்னை பாஜகவில் சேரும் படி கூறி அணுகவில்லை. பாஜகவில் நான் சேரப் போவதும் இல்லை.
ராகுல் காந்தி நடைபயணத்தில் பங்கேற்ற தொண்டர் கணேசன் என்பவர் விபத்தில் உயிரிழந்து விட்டார். அவருடைய உடல் இன்று மாலை வருகிறது. இறுதிச் சடங்கிற்கான ஏற்பாட்டில் இருக்கிறேன். “என்றார்.







