உழைக்காதாவர்களுக்கு கட்சியில் இடமில்லை – மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

கட்சி பணிகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள் என மாவட்ட செயலாளர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள்…

கட்சி பணிகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள் என மாவட்ட செயலாளர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணி, உறுப்பினர் சேர்க்கை, கருணாநிதி நூற்றாண்டு விழா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, கட்சி பணிகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள் என்றும், உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்றும் மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருவதாக கூறிய அவர், மாவட்ட செயலாளர்கள் சிலரை விடுவிக்கும் நிலை ஏற்படலாம் என்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை மும்முரமாக மேற்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை வெகு சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.