அரசின் சரியான திட்டமிடுதலால், தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை, என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பொதுமக்கள் தாமாக முன்வந்து, தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் விழிப்புணர்வில் உள்ளனர் எனவும், தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை என்ற நிலை இல்லை, என்றும் தெரிவித்தார்.
மேலும், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழக அரசின் சரியான திட்டமிடுதலால், ஆக்ஸிஜன் மற்றும் மாத்திரைகளுக்கு பற்றாக்குறை இல்லை என்பதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என உறுதிபட தெரிவித்தார்.







