இவரைத் தடுக்க யாருமில்லை: இணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதியின் ”ஜவான்” போஸ்டர்!

அட்லி இயக்கத்தில் உருவாகும் ”ஜவான்” படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் போஸ்டரை நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வருடத்தின் அதிகமாக எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா படம் என்றால் அது ஜவான்…

அட்லி இயக்கத்தில் உருவாகும் ”ஜவான்” படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் போஸ்டரை நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வருடத்தின் அதிகமாக எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா படம் என்றால் அது ஜவான் தான். படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வீடியோவில் ஷாருக்கான் இதுவரை பார்க்காத அளவிற்கு அதிரடி ஹீரோவாக தோற்றமளிக்கிறார். இதுவே இந்த படத்தின் மீதான ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது. ஜவான் படத்தின் சாட்டிலைட் உரிமை மட்டும் 84 கோடிக்கு வியாபாரம் பேசப்பட்டு இருக்கிறது. மேலும் படத்தின் டிஜிட்டல் உரிமம் மட்டும் 134 கோடியாகும்.

அதேபோன்று இசை உரிமம் 36 கோடிக்கு வியாபாரம் ஆகி இருக்கிறது. மேலும், கோலிவுட்டில் மாஸ் காட்டிய விஜய்சேதுபதி,  ஜவான் படத்தி வில்லனாக பாலிவுட்டில் ஓர் கலக்கு கலக்க இருக்கிறார். ஜவான் படத்தில் சம்பளம் கொடுக்கவில்லை என்றாலும் நான் நடித்து இருப்பேன். ஏன் என்றால் நான் ஷாருக்கானின் தீவிர ரசிகன் என்று விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

நேற்று படத்தின் இயக்குனர் அட்லி, விஜய் சேதுபதியின் இன்ட்ரோ போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் விஜய் சேதுபதியின் கண் மட்டும் இருக்கும்படி அமைக்கப்பட்டிருந்தது. ஜவான் படத்தில் இருந்து விஜய் சேதுபதிக்காக அவர் மட்டும் தனியாக இருக்கும்படி ஒரு டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

https://twitter.com/iamsrk/status/1683364300508008449

இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதியின் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இவரை தடுக்க யாருமில்லை…” என பதிவிட்டுள்ளார். ஷாருக்கான் வெளியிட்டுள்ள இந்த போஸ்டரை விஜய் சேதுபதியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.