திருமணமே வேண்டாம்; மணமகனை துரத்தி பிடித்த மணமகள்

பீகாரில் திருமணமே வேண்டாம் என ஓட்டம்பிடித்த மணமகனை, மணமகள் சாலையில் துரத்திப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் மெக்கார் கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், மஹூலி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்று…

பீகாரில் திருமணமே வேண்டாம் என ஓட்டம்பிடித்த மணமகனை, மணமகள் சாலையில் துரத்திப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் மெக்கார் கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், மஹூலி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, மணமகன் திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி சாலையில் ஓட்டம் பிடித்தார். அதிர்ச்சி அடைந்த மணமகள், மணமகனை துரத்திப்பிடித்து இழுத்து வந்தார். அப்போது, திருமணம் வேண்டாம் என மணமகன் அலறியதால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலம் மெக்கார் கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கும், மஹூலி கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக பெண் வீட்டார் மாப்பிளைக்கு ஒரு பைக்கும், ரூ.50000 ரொக்க பணமும் வரதட்சணையாக வாங்கியுள்ளார். இதையடுத்து பெண்ணின் வீட்டார் திருமண தேதியை குறிக்க சொல்லும் போது இன்றும் சிறிது நாட்கள் போகட்டும் என்று மாப்பிளை வீட்டார் தொடர்ந்து சொல்லி கொண்டு இருந்துள்ளனர்.

இந்நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த அந்த பெண் தனது பெற்றோருடன் சந்தைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வைத்து தான் கட்டிக்க போகும் மாப்பிள்ளையை பார்த்திருக்கிறார். உடனே அங்கு வைத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அந்த மாப்பிள்ளையோ அந்த பெண்ணிடம் இருந்து தப்பித்து செல்லவே முயற்சி செய்து கொண்டிருந்தார்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு வீட்டாருடனும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதனம் செய்து வைத்தனர். பின்னர் காவல் நிலையத்தில் வைத்து இருவருக்கும் போலீசார் திருமணத்தை நடத்தி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.