31.3 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள்

“வரும் கல்வியாண்டு முதல் 2 ஆண்டு B.Ed படிப்புகளுக்கு அனுமதி இல்லை”

இனி 2 ஆண்டு B.Ed படிப்புகளுக்கு அனுமதி கிடையாது, B.Ed படிப்புகள் 4 ஆண்டுகள் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்து உள்ளது.

இளநிலை பட்டப் படிப்புகளை முடித்து விட்டு, B.Ed பயிலும் மாணவர்களின் வசதிக்காகவும், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கிலும் தேசிக கல்விக்கொள்கை 2020யின்படி, ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம் செய்வதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ) அறிவித்திருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், சிறப்பு கல்வி உட்பட 2023-24 கல்வியாண்டில் இருந்து B.Ed 2 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுவதாகவும், 2 ஆண்டு B.Ed .படிப்புக்கு அனுமதி வழங்குவது நிறுத்தம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : 2024-ம் ஆண்டில் 50 நாடுகளில் தேர்தல்!

இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கை 2020யின் படி, “தேசிய ஆசிரியர் கவுன்சிலில் புதிய பயிற்சி திட்டத்தை விரைவில் அமல்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், 2 ஆண்டு B.Ed இயங்கும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க மாட்டாது.

தேசிய ஆசிரியர் கவுன்சிலிங் ஒருங்கிணைந்த 4 ஆண்டுகளுக்கு B.Ed படிப்பை நடத்த விரும்பும் கல்லூரிகள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் இதற்கான போர்ட்டல் திறக்கப்பட்டதும் புதிய கல்வி அமர்வுக்கு விண்ணப்பிக்கலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading