நடிகை நித்யா மேனன் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சமீபகாலமாக திரையுலக பிரபலங்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக திருமணம் செய்து கொண்டு புது வாழ்வில் நுழைந்து வருகின்றனர். ஏற்கனவே டோலிவுட் திரையுலகில் உள்ள பல ஹீரோக்களும் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலாகி வரும் நிலையில், ஹீரோயின்களும் திருமணம் செய்து கொள்கின்றனர்.
இந்த பட்டியலில் நடிகை நித்யா மேனனும் இணைந்துள்ளார். ’வெப்பம்’, ’ஓகே கண்மணி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நித்யா மேனன். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் கடைசியாக அவருடைய ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் வெளியானது.
இந்நிலையில், இவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் அவர் தனது பால்ய நண்பரான மலையாள ஹீரோவுடன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது. இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.







