தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக்கொண்டு கிரீஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த 22-ம் தேதி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவிலிருந்து புறப்பட்டார். அங்கு அவர் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு பல நாட்டின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உள்ளன. இந்த நாடுகளின் கூட்டமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஆக.22ஆம் தேதி தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு அவர் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு பல நாட்டின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்ட பிரதமர் மோடி இன்று கிரீஸ் சென்றார். அவருக்கு கிரீஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஜெராபெட்ரிட்டிஸ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸின் சந்திக்கும் பிரதமர் மோடி, கடல் போக்குவரத்து, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் கிரீஸ் நாட்டுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.







