முக்கியச் செய்திகள்

ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படம் வைக்க நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படம் வைக்கக் கோரி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

தெலுங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டம், பீர்கார் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள பேனரில் ஏன் பிரதமர் மோடி படம் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பட்டீலிடம் கேட்டார். நிர்மலா சீதாராமன் கேட்ட பல கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியர் தெரியவில்லை என்று பதில் கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால், கோபமடைந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “மத்திய அரசு சார்பில் மக்களுக்கு மாதாமாதம் வழங்கப்படும் ரேஷன் அரிசி ஒரு கிலோ சுமார் ரூ. 35 வரை விலை இருக்கும். இதனை மக்கள் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் வாங்கி கொள்கின்றனர். மாநில அரசு ரூ.3.30 ஒரு கிலோவுக்கு செலவு செய்கிறது. மீதமுள்ள ரூ. 30.70 காசுகள் மத்திய அரசு செலவு செய்கிறது. போக்குவரத்து செலவைக் கூட மத்திய அரசே ஏற்கிறது. ஆனால், தெலுங்கானாவில் இந்த அரிசியை மாநில அரசே மக்களுக்கு வழங்குவதாக கூறிக் கொள்கிறது.

கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசு அரிசியை இலவசமாக வழங்கியது. ஆனால், மாவட்ட ஆட்சியருக்கு ஒன்றுமே தெரியவில்லை. மாலைக்குள் ரேஷன் கடை முன்பு பிரதமர் மோடியின் படத்துடன் பேனர் வைக்க வேண்டும். இல்லையெனில் நானே பேனர் வைப்பேன். ஐஏஎஸ் படித்து, மத்திய அரசுக்கு விசுவாசமாக, நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். புரிகிறதா?” என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் முதல்வர்!

Halley Karthik

விமர்சனங்களுக்கு மத்தியில் வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’

Janani

தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்; சென்னையில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்

EZHILARASAN D