34.4 C
Chennai
September 28, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நிஃபா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் இல்லை ; கேரளா எல்லை பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

நிஃபா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் இல்லை எனவும் கேரளா எல்லை பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் காட்டி வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கூடலூரில் உள்ள அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்காக அடிக்கல் நாட்டுவதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் வருகை தந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது..

“ கேரளாவில் நிஃபா வைரஸ் தொற்று உள்ளதாகவும் அந்த நோய் தமிழகத்திற்குள் பரவாமல் இருக்க தமிழகத்தின் தமிழக கேரளா எல்லைப் பகுதியை
கொண்ட ஆறு மாவட்டங்களில் உள்ள தமிழக கேரளா எல்லைப் பகுதியில் வரும்
பயணிகளுக்கு ஆய்வு செய்த பின்னரே தமிழகப் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு காய்ச்சல் அறிகுறி இருக்கும் பட்சத்தில் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்படும். தமிழகத்தில் அந்த தொற்று இதுவரை இல்லாத சூழ்நிலையில் அதை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

கேரள மாநிலத்தில் நிஃபா வைரஸ் தொற்றால் இரண்டு பேர் உயிரிழந்த சூழ்நிலையில்
, தமிழகத்திற்கு பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறோம்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram